லியோ வெளியாகி ஓராண்டு நிறைவு: ஐரோப்பாவில் படைத்த மெகா சாதனையை பகிர்ந்த ஹம்சினி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த பிளாக்பஸ்டர் படமான 'லியோ' திரைக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு, படத்தின் ஐரோப்பிய விநியோகஸ்தரான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளது. லியோ திரைப்படம் நடிகர் விஜய்யுடன் தங்களின் ஐந்தாவது கூட்டணி என்றும், லோகேஷ் கனகராஜுடன் நான்காவது கூட்டணி என்றும் அந்நிறுவனம் நினைவு கூர்ந்துள்ளது. அப்போது ஐரோப்பாவில் மட்டும் 37 நாடுகள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் லியோ வெளியிடப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தது. அந்த பிரம்மாண்ட சாதனையை அண்மையில் வெளியான விஜய்யின் 'கோட்' திரைப்படம் முறியடித்ததாகவும் விநியோகஸ்தர்கள் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் அனிருத் இசையில் வெளியான லியோ, வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்தது. இன்றும் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் லியோவின் காட்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நினைவுகூரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
· Hamsinient