தமிழ் சினிமாவில் அட்லீயின் 10 ஆண்டு பயணம்: ராஜா ராணி முதல் ஜவான் வரை பிரம்மாண்ட சாதனை!

தமிழ் சினிமாவில் அட்லீயின் 10 ஆண்டு பயணம்: ராஜா ராணி முதல் ஜவான் வரை பிரம்மாண்ட சாதனை!

இயக்குனர் அட்லீ திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, '10 இயர்ஸ் ஆஃப் அட்லீயிசம்' என்ற சிறப்பு வீடியோ மற்றும் வாழ்த்துப் பதிவை டர்மெரிக் மீடியா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த பதிவு இணையத்தில் அட்லீ ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தொடர்ந்து தளபதி விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹாட்ரிக் பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்தார். அதைத் தொடர்ந்து பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகிலும் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்து புதிய சாதனை நிகழ்த்தினார். தொடர்ந்து கமர்ஷியல் படங்களை உணர்வுபூர்வமான கதைக் களத்தோடு இயக்கி மக்கள் மனம் வெல்லும் அட்லீயின் இந்த பத்தாண்டு திரைப் பயணத்தை சக திரையுலக பிரபலங்களும் சினிமா பிரியர்களும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

· Turmericmediatm

பழைய செய்திகள்