சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் கூட்டணியின் 'ரெமோ' வெளியாகி 10 ஆண்டுகள்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் கூட்டணியின் 'ரெமோ' வெளியாகி 10 ஆண்டுகள்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'ரெமோ' திரைப்படம் திரைக்கு வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த வெற்றிகரமான ரொமான்டிக் காமெடி திரைப்படத்தின் பத்தாம் ஆண்டு நிறைவை, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிறப்புப் பதிவுகள் மூலம் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் நர்ஸ் கெட்டப்பில் தோன்றி குடும்ப ரசிகர்களைக் கவர்ந்தார். கீர்த்தி சுரேஷுடன் அவர் இணைந்து நடித்த காட்சிகள் மற்றும் பி.சி. ஸ்ரீராமின் வசீகரமான ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தன. குறிப்பாக அனிருத்தின் இசையில் வெளியான 'செஞ்சிட்டாளே', 'சிரிக்காதே' மற்றும் 'ரெமோ நீ காதலன்' உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரிட் லிஸ்ட்டில் இடம்பிடித்தன. சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய கமர்ஷியல் வெற்றியாக அமைந்த 'ரெமோ', அவரது பாக்ஸ் ஆபிஸ் மார்க்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் இப்படத்தின் காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து தங்களின் நினைவுகளைப் புதுப்பித்து வருகின்றனர்.

· @_movietamil

பழைய செய்திகள்