தமிழ் சினிமாவுக்கு வயது 110: கீச்சக வதம் முதல் காளிதாஸ் வரை வரலாற்று பார்வை!
தமிழ் திரை உலகம் தனது 110வது வயதை எட்டியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை சினிமா ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வெளியான முதல் மவுனத் திரைப்படமான கீச்சக வதம் கடந்த 1916ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் பேசும் படங்கள் காலகட்டத்தைத் தொடங்கி வைத்த பெருமைக்குரிய காளிதாஸ் திரைப்படம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. இந்த அரிய வரலாற்று சுவடுகள் குறித்து நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் அரிய புகைப்படங்களுடன் விரிவான குறிப்பைப் பகிர்ந்துள்ளார். மவுனப் படங்களில் தொடங்கி பேசும் படங்களாகி இன்று நவீன தொழில்நுட்பங்களுடன் உலகெங்கும் கோலோச்சும் தமிழ் சினிமாவின் இந்த நெடிய பயணம், ஒவ்வொரு சினிமா ரசிகனும் பெருமைப்பட வேண்டிய தருணமாகும்.
· Actor Kayal Devaraj