பரத், தமன்னா நடித்த 'கண்டேன் காதலை': திரைக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவு
நடிகர் பரத் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த 'கண்டேன் காதலை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக மூத்த சினிமா பத்திரிகையாளர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் நினைவுகூர்ந்துள்ளார். இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் வெளியான இப்படம், இளைஞர்கள் மற்றும் காதல் ரசிகர்களின் மனதை வென்ற படங்களில் ஒன்றாக அமைந்தது. பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற 'ஜப் வி மேட்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் மறுஉருவாக்கமாக இப்படம் தயாரானது. கரீனா கபூர் நடித்த கீத் கதாபாத்திரத்திற்குத் தமிழில் அஞ்சலியாக தமன்னா தனது சுட்டித்தனமான நடிப்பால் உயிர் கொடுத்திருந்தார். அமைதியான தொழிலதிபர் சக்தியாக பரத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். வித்யாசாகரின் மெல்லிசைப் பாடல்களும் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்தன. இன்றும் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் மறுஒளிபரப்பாகும்போது இளசுகளின் விருப்பத் தேர்வாக 'கண்டேன் காதலை' விளங்கி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் 17 ஆண்டு நிறைவை முன்னிட்டுப் படக்குழுவினருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
· Actor Kayal Devaraj