19 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷின் 'பொல்லாதவன்': கோலிவுட்டில் இன்றும் பேசப்படும் வெற்றிப் பயணம்!

19 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷின் 'பொல்லாதவன்': கோலிவுட்டில் இன்றும் பேசப்படும் வெற்றிப் பயணம்!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான முதல் திரைப்படமான 'பொல்லாதவன்' வெளியாகி இன்றுடன் (நவம்பர் 8) 19 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2007-ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இத்திரைப்படத்தின் 19-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் பைக் கனவையும், வடசென்னையின் நிழல் உலகக் களத்தையும் நேர்த்தியாகக் காட்சிப்படுத்திய இந்தப் படம் தனுஷின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திவ்யா ஸ்பந்தனா, டேனியல் பாலாஜி, கிஷோர், சந்தானம் உள்ளிட்டோரின் நடிப்பும், ஜி.வி. பிரகாஷ்குமாரின் அதிரடியான பின்னணி இசையும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வெற்றிக் கூட்டணி தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அடுத்தடுத்து காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்து தமிழ் சினிமாவின் முன்னணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுத்தது. தற்போது 19 ஆண்டுகள் கடந்த நிலையிலும், பொல்லாதவன் படத்தின் விறுவிறுப்பும் தனுஷின் ஸ்டைலும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிலைத்து நிற்கிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்