20 ஆண்டுகளைக் கடந்த சச்சின்: தளபதி விஜய்யின் எவர்கிரீன் காதல் திரைப்படக் கொண்டாட்டம்
தளபதி விஜய், ஜெனிலியா மற்றும் வடிவேலு கூட்டணியில் வெளியாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த 'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை விநியோக நிறுவனமான ஏபி இன்டர்நேஷனல் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. ஜான் மகேந்திரன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான இப்படம் விஜய்யின் ஸ்டைலிஷான துள்ளலான நடிப்புக்கும், ஜெனிலியா உடனான சுவாரசியமான காதல் கெமிஸ்ட்ரிக்கும் பெயர் பெற்றது. குறிப்பாக வடிவேலுவுடன் விஜய் இணைந்து செய்த அய்யாசாமி காமெடி இன்றளவும் மீம்ஸ்களிலும் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து வருகிறது. பிபாஷா பாசுவின் சிறப்பு நடனமும் படத்தின் சுவாரசியத்தைக் கூட்டியது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான அனைத்து பாடல்களும் இன்றும் இளசுகளின் ஃபேவரிட் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன. 20 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதே புத்துணர்ச்சியோடு ரசிக்கப்படும் சச்சின் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகக் கொண்டாடி வருகின்றனர்.
· Apifilms