20 ஆண்டுகளைக் கடந்தும் குறையாத வல்லவன் மேஜிக்: நினைவுகளைப் பகிர்ந்த சோனி மியூசிக்!
சிலம்பரசன் டி.ஆர். இயக்கி நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான 'வல்லவன்' வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை சோனி மியூசிக் தென்னிந்தியா எக்ஸ் தளத்தில் கொண்டாடியுள்ளது. இரண்டு தசாப்தங்கள் கடந்த பின்னரும் இப்படத்திற்கான கிரேஸ் இன்றும் குறையாமல் இருப்பதாக பதிவிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிம்புவுடன் நயன்தாரா, சந்தியா, ரீமா சென் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான அனைத்து பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் பெரும் அலையை உருவாக்கியதோடு, இன்றும் பலரது ஃபேவரிட் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன. சிம்புவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான வல்லவன், காதலும் த்ரில்லரும் கலந்த விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது. இந்த 20 ஆண்டு நிறைவை சிம்புவின் தீவிர ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
· Sony Music South