23 ஆண்டுகளைக் கொண்டாடும் 'திருமலை': தளபதி விஜய்யின் அதிரடி திருப்புமுனை!
தளபதி விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய ஆக்ஷன் நாயகனாக அவரை நிலைநிறுத்திய வெற்றித் திரைப்படமான 'திருமலை' வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறித்து நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் நினைவு கூர்ந்துள்ளார். இயக்குநர் ரமணா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மெக்கானிக் திருமலையாக விஜய் ஏற்று நடித்த மாஸ் கதாப்பாத்திரம், அவருடைய திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. ஜோதிகா உடனான அழகான காதல் காட்சிகள், கவுசல்யாவின் இயல்பான நடிப்பு, மறைந்த நடிகர் விவேக்கின் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை மற்றும் வித்யாசாகரின் துள்ளலான பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. "வாழ்க்கை ஒரு வட்டம்" உள்ளிட்ட விஜய்யின் எனர்ஜியான பஞ்ச் வசனங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். 2003 தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்த திருமலை, விஜய் ரசிகர்களால் காலத்தால் அழியாத வெற்றிப் படமாக போற்றப்பட்டு வருகிறது. 23வது ஆண்டு நிறைவையொட்டி எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் #23YearsOfThirumalai என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
· Actor Kayal Devaraj