24 ஆண்டுகளை நிறைவு செய்த சொல்ல மறந்த கதை: சேரன், தங்கர் பச்சான் கூட்டணியின் எளிய கிராமத்து காவியம்!

24 ஆண்டுகளை நிறைவு செய்த சொல்ல மறந்த கதை: சேரன், தங்கர் பச்சான் கூட்டணியின் எளிய கிராமத்து காவியம்!

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் நடிகர் சேரன், ரதி நடிப்பில் உருவான எதார்த்தமான கிராமத்து திரைப்படம் 'சொல்ல மறந்த கதை'. கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நினைவை நினைவுகூர்ந்து நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார். நாஞ்சில் நாடனின் 'தலைகீழ் விகிதங்கள்' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். குடும்பப் பொறுப்புகள், சமூகத்தின் கசப்பான யதார்த்தம், சுயமரியாதை ஆகியவற்றைப் பேசிய சேரனின் இயல்பான நடிப்பு இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் சினிமாவில் எளிய மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகப் பதிவு செய்த முக்கியமான படைப்புகளில் ஒன்றாக 'சொல்ல மறந்த கதை' இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. 24 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இப்படத்தின் தாக்கத்தை சினிமா ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்