நாயகனாக சிம்பு அறிமுகமாகி 24 ஆண்டுகள்: காதல் அழிவதில்லை நினைவுகளைப் பகிர்ந்த ரசிகர்கள்!

நாயகனாக சிம்பு அறிமுகமாகி 24 ஆண்டுகள்: காதல் அழிவதில்லை நினைவுகளைப் பகிர்ந்த ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி நாயகனாக உயர்ந்த சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2002 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியான இப்படத்தின் 24வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடிகர் கயல் தேவராஜ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். விஜய டி.ராஜேந்தர் இயக்கம் மற்றும் இசையில் வெளியான இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சார்மி நடித்திருந்தார். சிம்புவின் துடிப்பான நடனம், ஸ்டைல் மற்றும் இப்படத்தின் பாடல்கள் அப்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் மூலமாக கதாநாயகனாக தன் பயணத்தைத் தொடங்கிய சிம்பு, இன்று கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குகிறார். சிம்பு நாயகனாக அறிமுகமாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் '24 Years of STR' என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்