கமல்ஹாசனின் எவர்கிரீன் காமெடி கிளாசிக்: 'அவ்வை சண்முகி' வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு!
உலகநாயகன் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு அசத்திய நகைச்சுவைக் காவியமான 'அவ்வை சண்முகி' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மூத்த கலைஞர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படத்தின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் மறைந்த கிரேசி மோகனின் சிரிப்பு சரவெடி வசனங்களுடன் உருவான இப்படத்தில் கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ், நாசர், மணிவண்ணன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தேவாவின் இசையில் வாலி எழுதிய அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. ஸ்ரீ மகாலட்சுமி கம்பைன்ஸ் தயாரித்த இப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பிளாக்பாஸ்டர் வெற்றியைப் பதிவு செய்தது. இன்றும் தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் சிரிக்க வைக்கும் 'அவ்வை சண்முகி', தமிழ் சினிமாவின் நகைச்சுவைத் திரைப்படங்களில் எப்போதும் நீங்காத ஒரு பொக்கிஷமாகத் திகழ்கிறது.
· Actor Kayal Devaraj