தமிழ் சினிமாவின் ஆல்டைம் பிளாக்பஸ்டர் 'நாட்டாமை': 32 ஆண்டுகளை நிறைவு செய்த கிராமத்துக் காவியம்!

தமிழ் சினிமாவின் ஆல்டைம் பிளாக்பஸ்டர் 'நாட்டாமை': 32 ஆண்டுகளை நிறைவு செய்த கிராமத்துக் காவியம்!

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் கலக்கிய 'நாட்டாமை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறித்து நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் நினைவுகூர்ந்துள்ளார். 1994-ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியானது. சரத்குமாரின் மிடுக்கான நாட்டாமை கம்பீரம், குஷ்பு மற்றும் மீனாவின் சிறந்த நடிப்பு, கவுண்டமணி, செந்தில், மனோரமாவின் அட்டகாசமான நகைச்சுவை காட்சிகள் இப்படத்தை இன்றும் பேசப்படும் படமாக மாற்றின. சிறுவனாக நடித்த மாஸ்டர் மகேந்திரனுக்கு இந்தப் படம் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. சிற்பியின் இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன. முப்பது ஆண்டுகளைக் கடந்த பின்னரும் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் நாட்டாமை படத்தின் காட்சிகள் தணியாத வரவேற்பைப் பெற்று வருகின்றன. தமிழ் சினிமா வரலாற்றில் குடும்பங்கள் கொண்டாடிய மறக்க முடியாத கிராமத்து படைப்பாக நாட்டாமை என்றும் நிலைத்திருக்கிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்