சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாபெரும் காவியம்: 'தளபதி' வெளியாகி 35 ஆண்டுகள் நிறைவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாபெரும் காவியம்: 'தளபதி' வெளியாகி 35 ஆண்டுகள் நிறைவு!

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பொக்கிஷங்களில் ஒன்றான மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான 'தளபதி' திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் திரைப்பட ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் படத்தைப் பற்றிய தங்களின் பசுமையான நினைவுகளையும் வசனங்களையும் பகிர்ந்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி ஆகியோரின் அபாரமான நடிப்புப் பொருத்தம் இப்படத்தை இன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இவர்களுடன் அரவிந்த்சாமி, ஷோபனா, ஸ்ரீவித்யா, நாகேஷ், பானுப்பிரியா, ஜெய்சங்கர், சார்லி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளங்களின் சிறப்பான நடிப்பும், இசைஞானி இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்களும் பின்னணி இசையும் தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் வரவேற்பைப் பெற்றன. நட்புக்கும் பாசத்திற்கும் மிகச் சிறந்த இலக்கணமாக அமைந்த இப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் என்றுமே போற்றப்படும் உன்னதமான படைப்பாக நிலைத்து நிற்கிறது. 35 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் சூர்யா மற்றும் தேவராஜின் நட்பு இன்றும் இளைய தலைமுறை ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்