தமிழ் சினிமாவில் 36 ஆண்டுகளை நிறைவு செய்த சீயான் விக்ரம்: என் காதல் கண்மணி முதல் தங்கலான் வரை அர்ப்பணிப்பின் பயணம்!

தமிழ் சினிமாவில் 36 ஆண்டுகளை நிறைவு செய்த சீயான் விக்ரம்: என் காதல் கண்மணி முதல் தங்கலான் வரை அர்ப்பணிப்பின் பயணம்!

இந்திய சினிமாவின் ஈடுஇணையற்ற அர்ப்பணிப்புமிக்க நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று வெளியான என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த விக்ரமிற்கு, ரசிகர்கள் மற்றும் சக திரைத்துறையினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆரம்ப காலகட்டங்களில் கடுமையான போராட்டங்களையும் சவால்களையும் எதிர்கொண்ட விக்ரம், தனது அசாத்திய உழைப்பாலும் நடிப்பின் மீதான தீராத தாகத்தாலும் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். சேது, பிதாமகன், அந்நியன், ஐ, ராவணன் முதல் சமீபத்தில் வெளியான தங்கலான் வரை ஒவ்வொரு படத்திலும் அவர் காட்டிய உடல் மற்றும் நடிப்பு மாற்றங்கள் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியவை. சினிமா மீது அவர் கொண்டுள்ள மாறாத காதலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் கொடுக்கும் அசாத்திய உழைப்பும் இளம் நடிகர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது. 36 வருட வெற்றிகரமான திரைப்பயணத்தைக் கொண்டாடும் சீயான் விக்ரமின் அடுத்தடுத்த படங்களை எதிர்நோக்கி உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் வாழ்த்தி மகிழ்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்