39 ஆண்டுகளை நிறைவு செய்த மணிரத்னம் மற்றும் கமல் காம்போவின் நாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

39 ஆண்டுகளை நிறைவு செய்த மணிரத்னம் மற்றும் கமல் காம்போவின் நாயகன்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய அடையாளமாக விளங்கும் நாயகன் திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் நினைவுகூர்ந்துள்ளார். 1987ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான இந்தத் திரைப்படம் இந்தியத் திரையுலகின் மறக்க முடியாத கலைப் படைப்பாகும். வேலு நாயக்கராக வாழ்ந்து காட்டிய கமல்ஹாசனின் அபார நடிப்பு, சரண்யா பொன்வண்ணனின் எளிமையான அறிமுகம், ஜனகராஜின் இயல்பான குணச்சித்திர நடிப்பு ஆகியவை இப்படத்தை உச்சத்தில் நிறுத்தின. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் தென்பாண்டிச் சீமையிலே, நீ ஒரு காதல் சங்கீதம் போன்ற பாடல்களும் காலத்தால் அழிக்க முடியாதவை. இப்படத்திற்காக கமல்ஹாசனுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. டைம் பத்திரிகையின் சிறந்த 100 உலகத் திரைப்படங்கள் பட்டியலில் இடம்பிடித்த நாயகன், இன்றும் இளம் இயக்குநர்களுக்குத் திரைக்கதை மற்றும் இயக்கப் பாடமாகத் திகழ்கிறது. 39 ஆண்டுகளைத் தொட்ட நாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் #39YearsOfNayakan ஹேஷ்டேக் வாயிலாகப் பாராட்டி வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்