ஓடிடியில் வெளியாகும் '4 இடியட்ஸ்': குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ள காமெடி கலாட்டா

ஓடிடியில் வெளியாகும் '4 இடியட்ஸ்': குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ள காமெடி கலாட்டா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்று வெள்ளித்திரையில் கால் பதித்த நகைச்சுவை நடிகர் புகழ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '4 இடியட்ஸ்'. நகைச்சுவையை மையமாகக் கொண்டு தயாராகியுள்ள இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏபி இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, '4 இடியட்ஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 16 முதல் சிம்ப்ளி சவுத் (Simply South) மற்றும் ஏபி இன்டர்நேஷனல் சவுத் சினிமா தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. இப்படத்தில் புகழுடன் இணைந்து பிரக்யா நயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையிலான நகைச்சுவைக் காட்சிகளுடன் இப்படம் தயாராகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். குக் வித் கோமாளி புகழ் திரையில் எப்போது தோன்றினாலும் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது என்பதால், ஓடிடி ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Apifilms

பழைய செய்திகள்