திரையரங்குகளில் அக்டோபர் 23 ரிலீஸ்: '418' திரைப்படத்திற்கு இன்னும் 3 நாட்களே பாக்கி!
ஹாரர் த்ரில்லர் திரைப்பட ரசிகர்களை மிரட்ட வரும் '418' திரைப்படம் வரும் அக்டோபர் 23 அன்று திரைக்கு வரவுள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர கவுண்ட்டவுனைத் தொடங்கியுள்ளனர். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் வெளியீடாக இப்படம் வெளியாகிறது. படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் டீசரும் ஏற்கனவே இணையத்தில் ரசிகர்களிடையே திகில் அனுபவத்தை ஏற்படுத்திப் பேசுபொருளாகியுள்ளன. தசரா பண்டிகை தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களுடன் வெளியாகியுள்ள இந்தப் புதிய போஸ்டர், திரையரங்குகளில் இந்த வாரம் வரவிருக்கும் மிரட்டலான அனுபவத்திற்கு ரசிகர்களைத் தயார்படுத்தி வருகிறது.
· Actor Kayal Devaraj