16 மில்லியன் பார்வைகளைக் கடந்து மிரட்டும் '418' டிரெய்லர்: அக்டோபர் 23 திரையரங்குகளில் வெளியீடு!

16 மில்லியன் பார்வைகளைக் கடந்து மிரட்டும் '418' டிரெய்லர்: அக்டோபர் 23 திரையரங்குகளில் வெளியீடு!

அதிரடி ஆக்ஷன் திரைப்படப் பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள '418' திரைப்படத்தின் டிரெய்லர், நான்கு மொழிகளிலும் சேர்த்து 16 மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியான இந்த டிரெய்லர், பிரமிக்க வைக்கும் ஆக்ஷன் சண்டைக்காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் திரையரங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் '418' திரைப்படம் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்