418 பட டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: தமிழ் உட்பட 3 மொழிகளில் வெளியாகிறது!
திரைப்பட மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, '418' திரைப்படத்தின் டிரெய்லர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி காலை 11:07 மணிக்கு வெளியாகவுள்ளது. தமிழ், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மூன்று முக்கிய மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த முன்னோட்ட வீடியோ வெளியிடப்படுகிறது. பன்மொழித் திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள '418' ஆரம்பம் முதலே சினிமா பிரியர்களின் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. விறுவிறுப்பான கதைக்களமும், அதிரடி சண்டை காட்சிகளும், தொழில்நுட்ப நேர்த்தியும் இப்படத்தில் பிரதானமாக இடம்பெற்றுள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அக்டோபர் 5 ஆம் தேதி காலை வெளியாகவுள்ள இந்த டிரெய்லர் படத்தின் மையக்கரு மற்றும் முன்னணி கதாபாத்திரங்கள் பற்றிய கூடுதல் சுவாரசியங்களை வெளிப்படுத்தும் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். டிரெய்லருக்கான கவுண்டவுன் தற்போது தொடங்கியுள்ளது.
· Ursvamsishekar