திகிலூட்டும் அமானுஷ்ய சூழல்: 418 திரைப்படத்தில் சைத்ரா ஜே ஆச்சாரின் நடிப்பிற்கு குவியும் பாராட்டு!

திகிலூட்டும் அமானுஷ்ய சூழல்: 418 திரைப்படத்தில் சைத்ரா ஜே ஆச்சாரின் நடிப்பிற்கு குவியும் பாராட்டு!

திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வரும் 418 The Film திரைப்படத்தின் அமானுஷ்ய சூழலுக்கும் தொழில்நுட்ப நேர்த்திக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக மலையாளம் ரிவ்யூ தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சைத்ரா ஜே. ஆச்சாரின் அசாத்திய நடிப்பு தற்போது பார்வையாளர்கள் மத்தியில் முதன்மை விவாதப் பொருளாக மாறியுள்ளது. பிரசாந்த் நீல் வழங்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தன் நடகவுடா இயக்கியுள்ள இந்த சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர், பழைய மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள அறை எண் 418-ஐ மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது. ஒலிக் குறிப்புகளும் ஒளிப்பதிவும் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான திகில் உணர்வை வழங்குகின்றன. அதில் சைத்ரா ஜே. ஆச்சாரின் மிரட்டலான முகபாவனைகளும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக திரையரங்குகளில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 418 திரைப்படம், த்ரில்லர் மற்றும் ஹாரர் பட விரும்பிகளுக்கு இந்த சீசனில் ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தைத் தந்து வருகிறது.

· MalayalamReview

பழைய செய்திகள்