மிரட்டலான ஹாரர் திரைப்படம் 418: திரையரங்க முன்பதிவு விறுவிறுப்பாகத் தொடக்கம்!

மிரட்டலான ஹாரர் திரைப்படம் 418: திரையரங்க முன்பதிவு விறுவிறுப்பாகத் தொடக்கம்!

ஹாரர் சினிமா பிரியர்களை மிரட்டும் நோக்கில் உருவாகியுள்ள 418 திரைப்படத்தின் திரையரங்க முன்பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயத்தை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு திகிலான அனுபவத்தை தரவிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் இந்த அதிரடி ஹாரர் திரில்லர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான தி லாஸ்ட் வார்னிங் ட்ரெய்லர் ரசிகர்களிடையே திகில் கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தியேட்டரில் பார்க்க தகுந்த ஒலி மற்றும் ஒளி அமைப்புகளுடன் கூடிய இந்த ஹாரர் படம் ரசிகர்களுக்கு புதுமையான த்ரில்லர் அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதால் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்