பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் '418': புக்மைஷோவில் ஒரே மணி நேரத்தில் 4300க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை!
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வரும் '418' (418 The Film) திகில் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. குறிப்பாக இரவு காட்சிகளுக்கு (Night Shows) ரசிகர்கள் மத்தியில் அபார வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், பிரபல டிக்கெட் முன்பதிவு தளமான புக்மைஷோவில் (BookMyShow) கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 4,360-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கீர்த்தன் நடகௌடா இயக்கத்தில், முற்றிலும் புதிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் புதுமையான ஒலி வடிவமைப்புடன் உருவான இந்த ஹாரர் திரைப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துள்ளது. 'தேவிகா' என்ற அமானுஷ்ய கதாபாத்திரத்தின் மிரட்டலான தோற்றம் திரையரங்குகளில் பார்வையாளர்களை உறைய வைத்துள்ளது. வார இறுதி நாட்களில் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாளம் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருவதால், பெரும்பாலான திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வரும் 418 திரைப்படம், வர்த்தக வட்டாரங்களிலும் ஆச்சரிய அலைகளை உருவாக்கியுள்ளது.
· Ursvamsishekar