காமெடி இல்லாத அசல் ஹாரர்: 418 படத்தின் வெளிநாட்டு முன்பதிவு ஆரம்பம்!
இதுவரை ஹாரர் படங்களில் காமெடி கலந்து பார்த்த ரசிகர்களுக்கு, எந்த சமரசமும் இல்லாத அசல் தூய ஹாரர் திரைப்படமாக '418 தி ஃபிலிம்' வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் வெளிநாட்டுத் திரையரங்கு முன்பதிவு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. பிரத்யங்கிரா சினிமாஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியிடுகிறது. அக்டோபர் 22 ஆம் தேதி வெளிநாடுகளில் சிறப்பு பிரிமியர் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. காமெடி கலக்காத உண்மையான திகில் அனுபவத்தை எதிர்பார்க்கும் சர்வதேச சினிமா ரசிகர்களுக்கு '418' ஒரு மிரட்டலான அனுபவமாக இருக்கும் என விளம்பர முன்னோட்டங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு வாழ் இந்திய ரசிகர்கள் மத்தியில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
· Ursvamsishekar