பிவிஆர் லேக்ஷோர் மாலில் '418 தி ஃபிலிம்' படக்குழுவிற்கு அரங்கு நிறைந்த வரவேற்பு!

பிவிஆர் லேக்ஷோர் மாலில் '418 தி ஃபிலிம்' படக்குழுவிற்கு அரங்கு நிறைந்த வரவேற்பு!

பிவிஆர் லேக்ஷோர் மால் திரையரங்கில் அரங்கு நிறைந்த ரசிகர்களுடன் '418 தி ஃபிலிம்' படக்குழுவினருக்குக் கிடைத்த அமோக வரவேற்புக் காட்சியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் திரைப்பட ஆர்வலர் வம்சி சேகர். திரையரங்கில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. இயக்குநர் கீர்த்தன் நடகவுடா இயக்கத்தில், சூர்யா ராஜ் வீரபத்தின மற்றும் சைத்ரா ஜே. ஆச்சார் நடிப்பில் வெளியான இந்த ஹாரர் திரில்லர் திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான மிரட்டல் அனுபவத்தைக் கொடுத்துள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கியுள்ள இப்படத்திற்குத் திரையரங்குகளில் நாளுக்கு நாள் ஆதரவு கூடி வருகிறது. ஹாரர் படங்களுக்கே உரிய பதற்றத்தையும் விறுவிறுப்பான திரைக்கதையையும் படம் சரியாகக் கொடுத்துள்ளதால், குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவுகிறது. வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், படக்குழுவினர் ரசிகர்களின் இந்த அன்பிற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்