புக்கிங் செயலிகளில் 2.25 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை: மிரட்டும் '418' திகில் திரைப்படம்!

புக்கிங் செயலிகளில் 2.25 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை: மிரட்டும் '418' திகில் திரைப்படம்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள '418' திகில் திரைப்படம், புக்மைஷோ மற்றும் டிஸ்ட்ரிக்ட் செயலிகள் வாயிலாக மட்டும் 2 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி திரையரங்குகளில் வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ளதாக கயல் தேவராஜ் தகவல் பகிர்ந்துள்ளார். வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அனைத்து மையங்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கீர்த்தன் நடகவுடா இயக்கத்தில் உருவான இந்த அமானுஷ்ய திகில் திரைப்படத்தில் சைத்ரா ஜே. ஆச்சார் தேவிகா என்ற வலிமையான கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள 418 என்ற மர்ம அறை மற்றும் யக்ஷகான கலைஞரின் பின்னணியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட திகில் காட்சிகள் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள '418' திரைப்படம், குடும்பங்கள் மற்றும் இளைஞர்களைத் திரையரங்கு நோக்கி ஈர்த்து வருகிறது. வழக்கமான பேய் படங்களின் பாணியிலிருந்து மாறுபட்டு உருவான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்