அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 75,000 டாலர்களைக் கடந்த 418 தி பிலிம் வசூல்!
வித்தியாசமான கதைக்களத்துடன் திரையரங்குகளில் வெளியான ‘418 தி பிலிம்’ (418 The Film) திரைப்படம், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 75,000 அமெரிக்க டாலர்களுக்கும் மேல் வசூலித்து வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. வட அமெரிக்காவில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் சினிமா விரும்பிகள் மத்தியில் படத்திற்குக் கிடைத்துள்ள நல்ல வரவேற்பைத் தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிய பட்ஜெட்டில் உருவான ஒரு சுயாதீனத் திரைப்படம் சர்வதேச சந்தையில் இந்த அளவிலான வசூலை ஈட்டுவது படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி நாட்களில் குடும்ப ஆடியன்ஸின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு முக்கிய வெளிநாட்டு நகரங்களில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு கிடைத்துள்ள வாய்மொழி விமர்சனங்கள் வசூலை மேலும் உயர்த்தும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
· Ursvamsishekar