அமெரிக்காவில் 240க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் '418': முன்பதிவு விறுவிறுப்பாக தொடக்கம்!

அமெரிக்காவில் 240க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் '418': முன்பதிவு விறுவிறுப்பாக தொடக்கம்!

தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள '418' திரைப்படத்தின் அமெரிக்க திரையரங்கு பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிஆர்ஓ வம்சி சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்கா முழுவதும் 240க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் மிக பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் இந்தியத் திரைப்படங்களில் இது ஒரு குறிப்பிடத்தக்க பெரிய வெளியீடாகப் பார்க்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையும் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள 418 திரைப்படத்திற்கு வெளிநாட்டு வாழ் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரீமியர் காட்சிகளுக்கான முன்பதிவு வேகமெடுத்துள்ள நிலையில், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் படம் சிறப்பான தொடக்கத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்