திரைக்கதை மன்னன் பாக்யராஜின் 'அந்த 7 நாட்கள்': வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவு!
திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்த காலத்தால் அழியாத கிளாசிக் படமான 'அந்த 7 நாட்கள்' வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1981 அக்டோபர் 26 அன்று வெளியான இப்படத்தின் சிறப்பைக் குறிப்பிட்டு திரைத்துறை ஆர்வலர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார். பாலக்காடு மாதவனாக பாக்யராஜின் வெகுளித்தனமான நடிப்பும், அம்பிகாவின் உணர்ச்சிகரமான நடிப்பும், மருத்துவர் ஆனந்தாக ராஜேஷின் பெருந்தன்மையான கதாபாத்திரமும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் நினைவில் நிலைத்து நிற்கின்றன. மாஸ்டர் ஹாஜா செரீப், கல்லாப்பெட்டி சிங்காரம் ஆகியோரின் நகைச்சுவை மற்றும் இயல்பான உரையாடல்கள் இப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரை விருந்தாக மாற்றின. "என் காதலி எனக்கு மனைவியாக வரலாம், ஆனால் இன்னொருவனின் மனைவி எனக்குக் காதலியாக வரக்கூடாது" என்ற கிளைமாக்ஸ் வசனமும், தியாகத்தை முன்னிறுத்தும் இறுதி முடிவும் இன்றும் தமிழ்த் திரையுலகின் ஆகச்சிறந்த திரைக்கதை விதிகளுக்கு முதன்மையான உதாரணமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
· Actor Kayal Devaraj