நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 'பைலட் பிரேம்நாத்': 48 ஆண்டுகள் நிறைவு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 'பைலட் பிரேம்நாத்': 48 ஆண்டுகள் நிறைவு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கம்பீர நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'பைலட் பிரேம்நாத்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 48 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை சினிமா பத்திரிகையாளர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 1978 ஆம் ஆண்டு தீபாவளி விருந்தாக அக்டோபர் 30 அன்று இப்படம் வெளியானது. இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பாக இந்த வண்ணப் படம் உருவானது. இதில் சிவாஜி கணேசனுடன் இணைந்து இலங்கை முன்னணி நடிகை மாலினி பொன்சேகா நாயகியாக நடித்தார். மேலும் விஜயகுமார், ஜெய்கணேஷ், குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துத் திரைக்கதையைச் சிறப்பித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் உருவான பாடல்களும், விமான ஓட்டியாக சிவாஜி கணேசன் வெளிப்படுத்திய மிடுக்கான நடிப்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. தமிழ் சினிமா வரலாற்றில் இருநாட்டு நட்புறவுக்கு சான்றாக நின்ற இந்த பொக்கிஷப் படத்தின் 48 ஆம் ஆண்டு நிறைவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்