ஆதி சாய்குமார் நடிக்கும் 'ஆதி ருத்ரா': ஆன்மிக மிஸ்ட்ரி த்ரில்லர் திரைப்படத்தின் அறிவிப்பு!

ஆதி சாய்குமார் நடிக்கும் 'ஆதி ருத்ரா': ஆன்மிக மிஸ்ட்ரி த்ரில்லர் திரைப்படத்தின் அறிவிப்பு!

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரான ஆதி சாய்குமார் நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்தியா திரைப்படம் 'ஆதி ருத்ரா'. ஆன்மிக மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் கதையம்சத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் கம்பீரமான போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தை இயக்குனர் நவரசன் இயக்குகிறார். காந்தாரா திரைப்படத்திற்கு அதிரடியான இசையமைத்து புகழ்பெற்ற அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிசூல் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. ஆன்மிகக் கூறுகளும் விறுவிறுப்பான மர்மத் திருப்பங்களும் நிறைந்த கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடிக்கும் ஆதி சாய்குமாருக்கு இது மிக முக்கியமான படைப்பாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

· @tamilcinexpress

பழைய செய்திகள்