ஆதி சாய்குமாரின் பிரம்மாண்ட மாயாஜால திரில்லர்: ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!
பிரபல தெலுங்கு நடிகர் ஆதி சாய்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் மர்மங்கள் நிறைந்த பக்தி திரில்லர் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் நவரசன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் அக்டோபர் 20 அன்று வெளியாகவுள்ளது. பிரசாந்த் ஜி ருத்ரப்பா தயாரிக்கும் இப்படத்திற்கு 'காந்தாரா' புகழ் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ஆன்மிக மர்மங்கள் மற்றும் விறுவிறுப்பான புதிர்களை மையமாகக் கொண்டு ஆதி சாய்குமாரின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் தயாராகி வருவதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆதி சாய்குமாருக்கு இந்த மாயாஜால திரில்லர் திரைப்படம் சிறந்த வரவேற்பைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 20 அன்று வெளியாகும் முதல் பார்வை மூலம் படத்தின் முழு தலைப்பு மற்றும் அடுத்தகட்ட படப்பிடிப்பு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
· Ursvamsishekar