ஆதி சாய்குமாரின் பிரம்மாண்ட மிஸ்டிக் த்ரில்லர்: அக்டோபர் 20 அன்று முதல் பார்வை வெளியீடு!

ஆதி சாய்குமாரின் பிரம்மாண்ட மிஸ்டிக் த்ரில்லர்: அக்டோபர் 20 அன்று முதல் பார்வை வெளியீடு!

தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகராக வலம் வரும் ஆதி சாய்குமார் தனது திரைப்பயணத்தில் மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் புதிய மிஸ்டிக் த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதன் முதல் பார்வை அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகும் என்றும் கோலிவுட் எண்ட் தளம் அறிவித்துள்ளது. நவரசன் இயக்கத்தில் உருவாகும் இந்த அமானுஷ்ய த்ரில்லர் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். காந்தாரா உள்ளிட்ட பிரம்மாண்ட பான்-இந்தியா திரைப்படங்களுக்கு அதிரடியான பின்னணி இசையமைத்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்த அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மர்மங்களும் அதிரடி திருப்பங்களும் நிறைந்த திரைக்கதையாக பல ஆச்சரியமூட்டும் காட்சிகளுடன் இப்படம் உருவாகி வருகிறது. ஆதி சாய்குமாரின் மிரட்டலான புதிய தோற்றம் மற்றும் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வரும் அக்டோபர் 20 அன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகவுள்ளது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த அமானுஷ்ய த்ரில்லர் திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Kollywood Ent

பழைய செய்திகள்