ஆதி சாய்குமாரின் பான் இந்தியா பக்தி திரில்லர் ஆதிரித்ரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திரிசூல் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது பிரம்மாண்ட தயாரிப்பாக நடிகர் ஆதி சாய்குமார் நடிப்பில் உருவாகும் ஆதிரித்ரா திரைப்படத்தை விஜயதசமி நன்னாளில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவரசன் இயக்கத்தில் பக்தி மற்றும் மர்மங்கள் நிறைந்த பான் இந்தியா திரில்லராக இப்படம் உருவாகவுள்ளதாக சினிமா செய்தித் தொடர்பாளர் வம்சி சேகர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். காந்தாரா புகழ் பி. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரசாந்த் ஜி ருத்ரப்பா தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஜே. ஷெட்டி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஆன்மீக மர்மங்கள் மற்றும் விறுவிறுப்பான புதிர்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2027 ஜனவரியில் தொடங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
· Ursvamsishekar