5 நாடுகளில் டிரெண்டாகும் 'ஆகாசம் லோ ஒக தாரா' டீசர்: நவம்பர் 20ல் வெளியாகும் எமோஷனல் திரைப்படம்!
தெலுங்கு சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஆகாசம் லோ ஒக தாரா' திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. யூடியூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. எவ்வளவு கஷ்டப்பட்டாவது உன்னை படிக்க வைக்கிறேன் கல்லூரியில் சேர் என்ற நெகிழ்ச்சியான வசனமும், மனதை வருடும் எமோஷனல் காட்சிகளும் சினிமா பிரியர்களின் மனதைத் தொட்டுள்ளன. கல்வியின் அவசியத்தையும் குடும்ப பாசத்தையும் மையமாகக் கொண்ட இப்படத்தின் டீசருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முழு வீச்சில் தயாராகியுள்ள இத்திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. குடும்பத்துடன் காண வேண்டிய ஒரு சிறந்த உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இது அமையும் என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
· Ursvamsishekar