இன்று மாலையே தொடங்கும் ஸ்பெஷல் பிரீமியர் காட்சிகள்: 'ஆகாயத்தில் ஒரு தாரகை' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு!

இன்று மாலையே தொடங்கும் ஸ்பெஷல் பிரீமியர் காட்சிகள்: 'ஆகாயத்தில் ஒரு தாரகை' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள உணர்வுப்பூர்வமான திரைப்படம் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' (Aakasamlo Oka Tara). உலகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களின் பேரார்வத்தைப் பூர்த்தி செய்ய இன்று மாலையே சிறப்பு பிரீமியர் காட்சிகள் தொடங்குகின்றன என்று படக்குழு உற்சாக வீடியோவுடன் அறிவித்துள்ளது. கனவுகளைத் துரத்தும் ஒரு மனிதனின் நெகிழ்ச்சியான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையறிந்த தயாரிப்பாளர்கள் ஒரு நாள் முன்னதாகவே பல்வேறு நகரங்களில் பெய்டு பிரீமியர் காட்சிகளை ஏற்பாடு செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். பல்வேறு முக்கிய மையங்களில் இந்த சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. திரையில் ஒரு மாயாஜால அனுபவத்தைக் காண துல்கர் சல்மானின் ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்