சூர்யாவின் 2டி தயாரிப்பு பாடல் ஆத்தி இவ யாரா 6 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜித்து மாதவன் இயக்கும் புதிய திரைப்படத்தின் 'ஆத்தி இவ யாரா' (Aathi Iva Yarraa) மற்றும் தெலுங்குப் பாடலான 'அம்மோ இதி எவர்ரா' ஆகியவை இணைந்து 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக சோனி மியூசிக் சவுத் நிறுவனம் அறிவித்துள்ளது. நஸ்ரியா பஹத் மற்றும் நஸ்லன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். தமிழில் ராஜ்பிரியன் எழுதிப் பாடியுள்ள இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடலின் துள்ளலான மெட்டும் படக்காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள இப்பாடலின் வெற்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த பாடல்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Sony Music South