ஸ்ரீராமுலு திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாடிய அபிநவ் கோமடம்: 'ஈஎன்இ ரிப்பீட்' படக்குழுவின் மாஸ் தியேட்டர் விசிட்!
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் 'ஈஎன்இ ரிப்பீட்' (ENE Repeat) திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் வரவேற்பு கூடிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இப்படத்தில் கௌஷிக் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அபிநவ் கோமடம், ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீராமுலு திரையரங்கிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். திரையரங்கிற்கு வந்த அபிநவ் கோமடத்தைக் கண்ட ரசிகர்கள், அவரது பெயரை முழக்கமிட்டு கைதட்டி விசிலடித்து உற்சாகமாக வரவேற்றனர். ரசிகர்களுடன் அமர்ந்து காட்சிகளை ரசித்த அவர், படம் பார்க்க வந்தவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தருண் பாஸ்கர் இயக்கத்தில் உருவான முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக வந்துள்ள 'ஈஎன்இ 2', இளசுகள் மத்தியில் மிகப்பெரிய நகைச்சுவை அலையை உருவாக்கியுள்ளது. திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வெற்றிப் பயணத்தை படக்குழுவினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
· Ursvamsishekar