லியோ படத்தின் 'ஹரோல்ட் தாஸ்' அர்ஜுன்: பிறந்தநாள் பரிசாக மிரட்டல் கிளிம்ப்ஸ் வெளியிட்ட லோகேஷ்!
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் அவரது கதாபாத்திரமான 'ஹரோல்ட் தாஸ்' கிளிம்ப்ஸ் வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்காக அர்ஜுன் மேற்கொண்ட கடின உழைப்பிற்கு நன்றியையும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும் லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வெளியான இந்த அதிரடி வீடியோவில் சிகரெட் பிடித்தபடி துப்பாக்கியுடன் அர்ஜுன் காட்டியுள்ள மிரட்டலான வில்லத்தனம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரத்தமும் ஆக்ஷனும் நிறைந்த இந்த காட்சிகளில் அர்ஜுனின் உடல்மொழியும் நடிப்பும் மிரட்டலாக அமைந்துள்ளது. ராக்ஸ்டார் அனிருத்தின் தெறிக்கவிடும் பின்னணி இசை இந்த காட்சிகளை மேலும் விறுவிறுப்பாக மாற்றியுள்ளது. தளபதி விஜய்க்கு எதிராக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மோதும் ஆக்ஷன் காட்சிகள் திரையரங்குகளில் அனல் பறக்கும் மோதலாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அக்டோபர் 19 அன்று வெளியாகவுள்ள லியோவில் இந்த ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Dir_lokesh