ஜெயராம் நடிப்பில் புதிய நகைச்சுவைத் திரைப்படம்: படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

ஜெயராம் நடிப்பில் புதிய நகைச்சுவைத் திரைப்படம்: படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

பிரபல நடிகர் ஜெயராம், ஆஷா சரத், முத்துக்குமார், வினோதினி மற்றும் குரைஷி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி வரும் புதிய குடும்ப நகைச்சுவைத் திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதன் கலகலப்பான நிறைவு விழா வீடியோவை கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நாகேந்திர முருகன் எழுத்து இயக்கத்தில் மூவிட்ரான் இந்தியா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சிரிப்பு மற்றும் கலகலப்பான தருணங்களை படக்குழுவினர் நினைவு கூர்ந்துள்ளனர். சித்து குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்