குட் நியூஸ் படப்பிடிப்பில் ஜெயராமின் திருமண நாள் கொண்டாட்டம்: குடும்பத்தினரின் சர்ப்ரைஸ் வருகை!

குட் நியூஸ் படப்பிடிப்பில் ஜெயராமின் திருமண நாள் கொண்டாட்டம்: குடும்பத்தினரின் சர்ப்ரைஸ் வருகை!

பிரபல மூத்த நடிகர் ஜெயராம் மற்றும் நடிகை பார்வதி ஜெயராம் ஆகியோரின் திருமண நாளை முன்னிட்டு 'குட் நியூஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் சிறப்பு சர்ப்ரைஸ் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். நாகேந்திர முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், மகள் மாளவிகா மற்றும் மருமகள் தாரிணி ஆகியோர் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் வருகை தந்து ஜெயராமுக்கு திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட குடும்பப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஆஷா சரத், கல்யாணி அனில், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் குடும்பங்கள் ரசித்து பார்க்கக்கூடிய ஒரு சிறந்த நகைச்சுவை திரைப்படமாக தயாராகி வருகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் இந்த குடும்பக் கொண்டாட்டம் படக்குழுவினரை நெகிழ வைத்துள்ளது.

· Idiamondbabu

பழைய செய்திகள்