மீண்டும் இணையும் பிரபுதேவா, வடிவேலு கூட்டணி: நடிகர் பீட்டர் உற்சாக தகவல்!

மீண்டும் இணையும் பிரபுதேவா, வடிவேலு கூட்டணி: நடிகர் பீட்டர் உற்சாக தகவல்!

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத நகைச்சுவை வெற்றிகளை தந்த பிரபுதேவா மற்றும் வடிவேலு காம்போ பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் கைகோர்த்துள்ளனர். சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர் பீட்டர், இக்கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் உற்சாகமாக பகிர்ந்துள்ளார். பிரபுதேவா மாஸ்டர் மற்றும் வடிவேலு சார் இணைந்து நடிப்பது இப்படத்திற்கு மிகப்பெரிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட பீட்டர், இப்படம் இதுவரை பார்த்திராத ஒரு மாறுபட்ட ஜானரில் உருவாகி வருவதாக தெரிவித்தார். தனக்கு இந்த படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பளித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். காதலன், வில்லு போன்ற படங்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இவர்களின் நகைச்சுவை கூட்டணி மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்