திரையரங்குகளில் வெற்றிகரமாக 3-வது வாரத்தில் நுழைந்த சதீஷின் ட்ரோன்ஸ் திரைப்படம்!

திரையரங்குகளில் வெற்றிகரமாக 3-வது வாரத்தில் நுழைந்த சதீஷின் ட்ரோன்ஸ் திரைப்படம்!

நடிகர் சதீஷ் மற்றும் சித்தி இத்னானி இணைந்து நடித்து வெளியான புதுமையான அறிவியல் காமெடி திரைப்படமான 'ட்ரோன்ஸ்' வெற்றிகரமாக தனது 3-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது என படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். நவீன தொழில்நுட்பமான ட்ரோன்களையும் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையையும் கலந்து சுவாரசியமான திரைக்கதையோடு வெளியான இத்திரைப்படம் குடும்பப் பார்வையாளர்களைத் திரையரங்கிற்கு அதிகளவில் ஈர்த்து வருகிறது. குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளிச் சிறுவர்களை கவரும் பல சுவாரசியமான நகைச்சுவை காட்சிகள் படத்தில் நிறைந்துள்ளன. இதன் பலனாகத் திரையரங்குகளில் மக்கள் சிரித்து மகிழும் காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகின்றன. ரசிகர்கள் அளித்து வரும் மகத்தான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள படக்குழுவினர், புதிய திரையரங்குகளிலும் படத்திற்கான காட்சிகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கதையின் நாயகனாக சதீஷின் இந்த மாறுபட்ட முயற்சி ரசிகர்களிடையே நல்ல மதிப்பை உருவாக்கியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்