25 மாவட்டங்கள், 2,000 ரசிகர்கள்: சென்னையில் பிரம்மாண்ட போட்டோஷூட் நடத்திய நடிகர் சூர்யா!
நடிகர் சூர்யா தனது அகில இந்திய நற்பணி இயக்கத்தின் சார்பில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்களை நேரில் சந்தித்து பிரம்மாண்ட போட்டோஷூட் நிகழ்வை நடத்தியுள்ளார். சென்னை மாங்காடு சாலை பரணிபுத்தூரில் இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒவ்வொரு ரசிகரையும் சூர்யா தனித்தனியாகச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் ரசிகர்களின் குடும்ப நலன்களைக் கேட்டறிந்த அவர், சாலைப் பாதுகாப்பு, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அன்பான வேண்டுகோள் விடுத்தார். திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூர்யாவின் இந்த எளிமையான அணுகுமுறை ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
· Prosathish