குட்டி சஞ்சய் இயக்குனராகிட்டதை நம்பவே முடியல: ஜேசன் சஞ்சய்க்கு நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி வாழ்த்து!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பாசமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 'சின்னஞ்சிறு சஞ்சய் இப்போது ஒரு இயக்குனராகிவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை' என்று சூர்யா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 'உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்' என்று தமிழில் மனதார வரவேற்றுள்ள சூர்யா, படத்தின் நாயகன் சந்தீப் கிஷன், தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த வாழ்த்து பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ளது. விஜய் மற்றும் சூர்யா இடையேயான பல ஆண்டுகால ஆழமான நட்பு அனைவரும் அறிந்ததே. தற்போது தனது நண்பனின் மகன் திரைத்துறைக்குள் இயக்குனராக அடியெடுத்து வைக்கும் வேளையில் சூர்யா வெளிப்படுத்தியுள்ள இந்த அன்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

· Prosathish

பழைய செய்திகள்