நடிகர் வெற்றியின் புதிய படம் பரீட்: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
8 தோட்டாக்கள் மற்றும் ஜிவி உள்ளிட்ட தரமான த்ரில்லர் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வெற்றியின் அடுத்த திரைப்படமான பரீட் (Buried) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மூத்த சினிமா பத்திரிகையாளர் கயல் தேவராஜ் இந்த போஸ்டரை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ட்ரீம் ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த புதிய படத்தில் சாந்தினி, அக்ஷதா, ஜென்சன் திவாகர், கோடங்கி வடிவேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் வடிவமைக்கப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றியின் இந்த புதிய படமும் ரசிகர்களுக்கு மற்றொரு விறுவிறுப்பான அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj