விஷாலின் திரை வாழ்க்கையில் திருப்புமுனை: 19 ஆண்டுகளை நிறைவு செய்த 'மலைக்கோட்டை'
நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து வெளியான அதிரடி பொழுதுபோக்குத் திரைப்படம் 'மலைக்கோட்டை'. பூபதி பாண்டியன் இயக்கத்தில் பிரியாமணி நாயகியாகவும், ஆஷிஷ் வித்யார்த்தி வில்லனாகவும் நடித்து உருவான இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 19 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விஷாலின் சினிமா பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. மணிசர்மா இசையமைப்பில் உருவான பாடல்களும், நடிகர் அசிஸ் மற்றும் ஊர்வசியின் கலகலப்பான நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்களைத் திரையரங்குகளில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. விஷாலின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. வெளியாகி 19 ஆண்டுகள் கடந்த பிறகும் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் இன்றும் ரசிகர்களால் ரசித்து பார்க்கப்படும் ஒரு முழுநீள பொழுதுபோக்கு படமாக மலைக்கோட்டை திகழ்கிறது. விஷாலின் துடிப்பான நடனம் மற்றும் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் இன்றும் இளம் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
· Actor Kayal Devaraj