பிரபுதேவா, வடிவேலுவுடன் நடித்தது பெருமை: நடிகை அனுகீர்த்தி வாஸ் நெகிழ்ச்சி!

பிரபுதேவா, வடிவேலுவுடன் நடித்தது பெருமை: நடிகை அனுகீர்த்தி வாஸ் நெகிழ்ச்சி!

முன்னாள் இந்திய அழகியும் நடிகையுமான அனுகீர்த்தி வாஸ், பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய படத்தில் நடித்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுகீர்த்தி வாஸ் நடித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அனுகீர்த்தி வாஸ், இது தனது இரண்டாவது தமிழ் திரைப்படம் என்றும், இந்திய சினிமாவின் நடன ஜாம்பவான் பிரபுதேவா மற்றும் நகைச்சுவை சக்ரவர்த்தி வடிவேலு ஆகியோருடன் திரையை பகிர்ந்தது பெருமையான தருணம் என்றும் கூறினார். தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். இந்தியாவிற்கு வெளியே பல்வேறு வெளிநாட்டுக் களங்களில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் முழுநீள குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீசுக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக அனுகீர்த்தி வாஸ் உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்