தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் ஷெர்ரி அகர்வால்: 'சைக்கிள் கேப்' படக்குழு அறிவிப்பு
பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் இளம் நடிகை ஷெர்ரி அகர்வால், தற்போது நேரடித் தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 'சைக்கிள் கேப்' என்ற பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மொழிகளில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர் உள்ளிட்ட மக்கள் தொடர்பாளர்கள் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளனர். இளமை ததும்பும் கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகும் இப்படத்தின் மற்ற நடிகர்கள், இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj