'ட்ரோன்ஸ்' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவை ஊக்குவிக்கும் நடிகை சித்தி இத்னானி
தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் பேண்டஸி திகில் திரைப்படமான 'ட்ரோன்ஸ்' படத்திற்கு பிரபல இளம் நாயகி சித்தி இத்னானி தனது முழு ஆதரவை வெளிப்படுத்தி உற்சாகமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் சிலம்பரசனின் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த சித்தி இத்னானி, இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்து பேசியுள்ளார். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ட்ரோன்ஸ்' படத்திற்கு நாளுக்கு நாள் பார்வையாளர்களின் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் சித்தி இத்னானியின் இந்த புத்தம் புதிய ஆதரவு பதிவு படத்திற்கு மேலும் உற்சாகத்தையும் விளம்பர பலத்தையும் சேர்த்துள்ளது. திரையரங்குகளில் டிக்கெட்டுகள் வேகமாக நிரம்பி வருவதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் படத்தை தியேட்டரில் பார்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வித்தியாசமான சிந்தனையோடு புதிய இயக்குநர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முன்வந்து கைகொடுப்பது தமிழ் சினிமா ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளதுடன், படக்குழுவிற்கும் பெரிய பலமாக அமைந்துள்ளது.
· Actor Kayal Devaraj